Tamil/தமிழ்
லீகல்எய்ட்உங்களுக்குஎப்படிஉதவமுடியும்?
குற்றச் செயல்கள், குடும்ப வாழ்க்கை முறிவுகள், குழந்தை ஆதரவு, மனநலம், குடும்ப வன்முறை, கடன் தொல்லை, வீட்டு வசதி, அரசு கொடுப்பனவு, குடிவரவு என்று அனைத்து சட்ட ரீதியான பிரச்சனைகளுக்கும் நாம் உதவ தயாராக உள்ளோம்.
நாம் வழங்கும் இலவச சேவையை நீங்கள்:
- தொலைபேசி மூலமோ அல்லது
- முன் பதிவுசெய்த நேரப்படி நேருக்கு நேராகவோ அல்லது
- எமது வெளியீடுகள், கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறை மூலமோ பெறலாம்
உங்களுக்கு சட்ட ஆலோசனைக்கும் அதிகமாக சட்டஉதவிபெற நிதி தேவைப்பட்டால் நீங்கள் அதற்காக விண்ணப்பிக்கலாம். ஆனால் உங்களின் பின்னணியைப் பொறுத்தே நீங்கள் நிதி உதவிக்கு தகுதி உடையவரா என்பது முடிவு செய்யப்படும்.
சட்டம் தொடர்பான தகவல் அறிய அழையுங்கள்: லா அக்செஸ் LawAccess NSW – 1300 888 529. நாங்கள் எப்படி உங்களுக்கு உதவ முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் மொழியில் நீங்கள் பேசவேண்டுமென்றால் நீங்கள் மொழிபெயர்ப்பு சேவை இலக்கம் 131 450-ஐ காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் அழைத்து மொழிபெயர்ப்பாளர் தேவை என்று கூறி பின் லா அக்செஸ் LawAccess NSW – 1300 888 529 என்ற இலக்கத்தை அழையுங்கள்.