If you've been affected by recent flooding and need legal help, call the Disaster Response Legal Service NSW on 1800 801 529 between 9am and 5pm Monday to Friday or visit the DRLS website for more information.
Legal Advice - Tamil (தமிழ்)
உங்களுடைய ஒரு குறிப்பிட்ட சட்டப் பிரச்சனைக்கு ஒரு வழக்கறிஞர் உதவி அளிக்கும் போது, நாங்கள் அதை சட்ட ஆலோசனை என்கிறோம். சட்ட ஆலோசனை என்பது சட்டத் தகவலிலிருந்து வேறுபட்டது. இது மிகவும் பொதுவானதாக இருக்கலாம் மற்றும் வழக்கமாக சட்டத்தைப் பற்றி அறிந்த ஆனால் வழக்கறிஞர் அல்லாத ஒருவரால் வழங்கப்படும்.
NSW வில் உள்ள சட்டப் பிரச்சனை உள்ள எவர் ஒருவருக்கும், எங்களுடைய சட்டத் தகவல் மற்றும் பரிந்துரை சேவை அமைப்பான LawAccess NSW மூலம் லீகல் எய்டு NSW சட்டத் தகவலை அளிக்கிறது.
NSW முழுவதிலும் பல இடங்களில், தகுதியான நபர்களுக்கு நாங்கள் தொலைபேசி மூலம் இலவச சட்ட ஆலோசனை அளிக்கிறோம்.
எங்களுடைய சட்ட ஆலோசனை அமர்வுகள் இலவசமானவை மேலும் பொதுவாக 20 நிமிடங்கள் நீடிக்கும். ஒரு வழக்கறிஞர் நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்கள் பிரச்சனை பற்றி உங்களிடம் பேசுவார், அதைத் தொடர்ந்து சில கேள்விகளைக் கேட்பார் மேலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என முடிவெடுப்பதில் உங்களுக்கு உதவுவார்.
உங்களுக்கு வழக்கறிஞர் ஒருவர் இல்லையெனில், குறுகிய ஆவணங்கள் தொடர்பாக அவர்களால் உங்களுக்கு உதவமுடியலாம். நீண்ட சிக்கலான சட்ட ஆவணங்கள் தொடர்பாக அவர்களால் உங்களுக்கு உதவ இயலாது.
உங்கள் வழக்கில் அவர்களால் தொடர்ந்து உங்களுக்கு உதவ முடியுமா என்பதையும் உங்கள் வழக்கறிஞர் உங்களிடம் கூறுவார். அவர்களால் முடியுமெனில், சட்ட உதவிக்கான விண்ணப்பதை நிரப்புவதில் பணியாளர் உங்களுக்கு உதவுவார்.
உங்கள் ஆலோசனை அமர்வுக்குப் பிறகு எங்களால் உங்களுக்கு உதவ இயலாதென்றால், மேலதிக உதவிக்கு நீங்கள் எங்கே செல்லலாம் என்பது பற்றிய தகவலை எங்களால் உங்களுக்கு அளிக்க இயலக்கூடும்.
காவல்துறை தொடர்பான குற்றவியல் வழக்குகள், குழந்தைகள் தொடர்பான குடும்ப விவகார வழக்குகளில் அல்லது உறவு முறிதல் அல்லது வீடு, வருமான உதவி அல்லது சுகாதாரத் தேவைகளுக்கான அணுகல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆதரவு போன்ற உரிமையியல் விவகாரங்களில் எங்கள் வழக்கறிஞர்களால் உங்களுக்கு உதவு முடியும்.
நாங்கள் எல்லோருக்கும் சட்ட ஆலோசனை அளிப்பதில்லை. NSW வில் அனுகூலமற்ற நிலையில் உள்ளவர்களுக்கு சட்ட சேவைகள் வழங்குதே எங்கள் நோக்கமாகும், மேலும் இதை எட்டுவதற்கு எங்களிடம் குறைந்த அளவு வளஆதாரங்களே உள்ளன.
எங்களால் உங்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்க முடியுமா அல்லது ஒரு சந்திப்பைப் பதிவு செய்ய முடியுமான என்பதைத் தெரிந்துகொள்ள LawAccess NSW வில் உள்ள எங்கள் குழுவிடம் பேசுவதே சிறந்த வழியாகும்.
1300 888 529 என்ற எண்ணை அல்லது அவர்களின் ஆன்லைன் வெப்சேட் (Online webchat) சேவையைப் பயன்படுத்தி நீங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை வேலை செய்கிறார்கள் (பொது விடுமுறை நாட்கள் நீங்கலாக).
We use cookies to give you the best possible experience on our website. By selecting 'Accept cookies', you agree to our cookie policy.
Share with
Facebook
Twitter
LinkedIn